Cast: Aravindh Swami, STR, Vijay Sethupathi, Arun Vijay, Prakash Raj, Jothika, Aiswarya Rajesh, Aditi Rao, Dayana Erappa
Music: A.R.Rahman
Cinematographer: Santhosh Sivan
Director: Mani Ratnam
Producer: Mani Ratnam, Subaskaran
மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், நடிகைகள் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் செக்க சிவந்த வானம். சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம், தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய கூட்டணிகளில் ஒன்று மணிரத்தினம் கூட்டணி. அக்கூட்டணியில் உருவாகியுள்ள படம், பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள படம் என பல எதிபார்புகள். நம் எதிபார்புகளை பூர்த்தி செய்ததா ? விமர்சனத்தை பார்போம்.
தாதா சேனாதிபதிக்கு வரதன், தியாகு, எத்தி என மூன்று மகன்கள், மகள், மனைவி என கெத்தாக வாழ்ந்து வருகிறார். தீடிரென பெரியவர் என அழைக்கப்படும் சேனதிபதியை கொல்ல முயற்சி நடக்கிறது. அதிலிருந்து தப்பிக்கும் சேனாதிபதி மாரடைப்பால் இறந்து விடுகிறார். பெரியவர் இறந்த உடன் பல்வேறு சம்பவங்களால் அண்ணன் தம்பிகளான தியாகு, எத்தி மூத்த அண்ணன் வரதனை பகையாளியாக நினைத்து துரத்துகின்றனர். வரதனுக்கு ரசூல் எனப்படும் விஜய் சேதுபதி துணையாக இருக்கிறார். இந்த போராட்டத்தில் யார் வென்றது. அடுத்த பெரியவர் யார் ? அண்ணன் தம்பிகள் சேர்ந்தார்களா என்பதே செக்க சிவந்த வானம்.
ரொம்ப நாள் கழித்து சிம்புவை திரையில் பார்ப்பதே கொண்டாட்டம். சிம்பு, விஜய் சேதுபதி பேசும் வசனங்களில் திரையரங்கு முழுக்க அதிர்கிறது. அரவிந்த் சுவாமி, மற்றும் அருண் விஜயின் நடிப்பு பக்கா. ஜோதிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு நாம் சொல்லவே தேவையில்லை பல படங்களில் நிருபித்து இருக்கிறார். இதிலும் சூப்பர் அதுபோல அதிதி ராவ், டயானா எரப்பாவும் நன்றாக நடித்துள்ளார்.
மணிரத்னத்திற்கு கேங்ஸ்டர் படம் என்றாலே நமக்கு நியாபகம் வருவது நாயகன், தளபதி தான் இரண்டுமே மாஸ்டர் பீஸ் . அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இது ஒகே என்பது ரசிகர்களின் டாக் . ரஹ்மான் இசையை மணிரத்தினம் படத்துல பாக்குறது என்றாலே ஒரு தனி கிக் தான் ! மாஸ் காட்டியிக்கிறார். பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் இருந்தாலும் திரையில் பார்பதற்கு தாறு மாறு ! காட்சி காட்சி படத்தை அழகாக காட்டுயிருக்கிறார் சந்தோஷ் சிவனின். மொத்தத்தில் செக்க சிவந்த வானத்தை ரியல் லைஃப்ல வானத்துல பாக்குற அளவுக்கு இல்லையென்றாலும் ரீல் லைஃப் சினிமா பாக்கலாம் ஓகே !
No comments:
Post a Comment