விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் நடித்த முதல் படத்தின் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் வர்மா. இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அர்ஜீன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இப்படத்தை பாலா இயக்கியுள்ளார். ரீமேக் படங்களே இயக்காத பாலா விக்ரம்காக மட்டுமே ரீமேக் செய்ய ஒப்புக்கொண்டார். இதை விக்ரமே சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஒருபுறம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன படம் அர்ஜீன் ரெட்டி, மறுபுறம் பாலா இயக்கும் முதல் ரீமேக் படம். விக்ரமின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம் என பல்வேறு எதிர்பார்புகளை ஏற்படுத்தி இருக்கும் வர்மா படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வர்மா படத்திற்காக தான் வாங்கிய முதல் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் துருவ் விக்ரம். இதற்கான காசோலையை நேற்று துருவ் விக்ரமே கேரள முதல்வர் பிரணாயி விஜயனிடம் வழங்கினார் . அங்கு எடுத்த சில புகைப்படங்கள் நேற்று இணையதளத்தில் வெளியானது. அதை பார்த்த பலர் துருவ் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment