நேத்து வர ஏமாளி ஏமாளி ஏமாளி ஏமாளி இன்று முதல் போராளி போராளி போராளி என வரிகள் ஆரம்பிக்கும் போதே நமக்கு தெரிந்து விடுகிறது ஒரு விரல் புரட்சி கம்யூனிசம் பேசும் பாடல் என்று. விவேக்கின் வரிகளும் ரகுமானின் கம்பீரமான குரலும் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
நீதியை கொள்கிறாய் மௌனமாய் போகிறாம் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் என்ற விவேக்கின் வரிகள் கொஞ்சம் அல்ல கொஞ்சம் அதிகமாகவே நம்மை சிந்திக்க வைக்கிறது. சிம்டாங்காரனை மற்றவர்கள் வெறுக்கும் போதும் விமர்சிக்கும் போதும் ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம் என்ற வரிகள்தான் விவேக்கிற்கு நிச்சயம் நினைவுக்கு வந்திருக்கும்.
ஜன கன மன, எல்லா புகழும் இறைவனுக்கே போன்ற பாடல்களை போல இந்த பாடலிலும் ரகுமானின் மந்திர குரல் நம்மை சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரீநிதி வெங்கடேசன் ஒரு சிறிய வரியை மட்டுமே பாடியிருந்தாலும் அது நம்மை வெகுவாக ஈர்க்கிறது. பாடல் முழுக்க அவர் குரல் இருக்காத என நம்மை ஏங்க வைக்கிறது.
ரகுமானின் பிண்ணனி இசை பிரமாதம். விவேக் செதுக்கிய வரிகளுக்கு ரகுமான் வார்த்தையாகவும் இசையாகவும் உயிர் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு விரல் புரட்சி சிம்டாங்காரனை விமர்சித்தவர்களுக்கு பதிலடி.
Rating: 4/5
Rating: 4/5
No comments:
Post a Comment