சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.
அத்தாரின்டிகி தாரேதி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் ஆன இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு காரணம் இது முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டது தான். அதுமட்டுமின்றி தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்கையில் தமிழ் ஆடியன்ஸ்க்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் அதை செய்யாமல் போனது தான் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காமல் போனதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் மலேசியாவில் மட்டும் இதுவரை வந்தா ராஜாவாதான் வருவேன் ரூ 67 லட்சம் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment