சினிமா நடிகைகளின் சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்படுவது தற்போது சகஜமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட ஹன்சிகா தன் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறி பரப்பரப்பை கிளப்பியிருந்தார்.
இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக புகார் கூறியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேகாஷ். "தன் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும். அதிலிருந்து வரும் செய்திகளை தவிர்க்கும் படியும் ரசிகர்களிடம் கூறியுள்ளார். இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
Instagram hacked! Kindly please ignore all the messages and random things! My backend team working on it.. will retrieve it asap...Thank you🙏🏽🙏🏽🙏🏽— Megha Akash (@akash_megha) February 4, 2019
மேகா ஆகாஷ் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, அதர்வாவின் பூமராங் போன்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment