Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2019

தல - தளபதியுடன் நடிக்க ஆசை! பிரபல நடிகை ஓப்பன் டாக்



கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்திற்கு முன் கௌதம் கார்த்தியின் என்னமோ ஏதோ படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால் தீரன் படத்தின் மூலம்தான் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது கார்த்தியின் தேவ் படத்தில் நடித்துள்ள ரகுல் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய ரகுல் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான அஜித், விஜயுடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அவர்கள் மட்டுமல்லாமல் சூர்யா, கார்த்தியுடனும் மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள என்.ஜி.கே படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages