Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2019

தளபதி 63யில் விஜயின் பெயர் இதுதான்! கசிந்த தகவல்


சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படம் தளபதி 63 என அழைக்கப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில காட்சிகளை அமெரிக்காவில் எடுக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று கசிந்துள்ளது.அது என்னவென்றால் தளபதி 63யில் விஜக்கு சி.மைக்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். சி.மைக்கல் என்பதை சுருக்கி அனைவரும் சி.எம் என்றே அவரை அழைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages