Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 18, 2018

சண்டக்கோழி 2 - விமர்சனம்


Cast: Vishal, Keerthi Suresh, Varalaxmi Sarthkumar, Rajkiran and More

Cinematography: K.A.Sakthivel

Music: Yuvan Shankar Raja

Edited by: Praveen K.L

Directed by: Lingusamy

Produced by: Vishal, Dhaval Jayantilal Gada, Aksay Jayantilal Gada

வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது தமிழ் சினிமாவில் சகஜமான ஒரு நிகழ்வு ஆகிவிட்டது.  அதுவும் 10 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களை ஆயுதமாய் எடுத்து கோலிவுட் இயக்குனர்கள் களம் இறங்கி உள்ளனர். அந்த வகையில் இன்று வெளிவந்திருக்கும் படம்தான் சண்டக்கோழி 2 . இது 13 வருடங்களுக்கு முன் வெளிவந்து மிரட்டிய சண்டக்கோழியா இல்லை சாதாரண கோழியா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

விமர்சனம்

ஊர் திருவிழாவிற்காக வெளிநாட்டில் இருந்து ஏழு வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வருகிறார் விஷால். அங்கு நடக்கும் திருவிழாவிற்கான பஞ்சாயத்தில் தன் அப்பாவான ராஜ்கிரணை எதிர்த்து பேசியவனை அடிக்க நினைக்கிறார். அதே ஊர் திருவிழாவில் ஏழு வருடங்களுக்கு முன் தன் கணவனை கொலை செய்த வம்சத்தை பழிவாங்கிய வரலட்சுமி அதில் மிச்சமிருக்கும் ஒருவரையும் தற்போது நடக்கும் திருவிழாவில் கொல்ல வேண்டும் என முடிவு செய்கிறார். அவர் யாரை கொல்ல துடிக்கிறாரோ அவர் ராஜ்கிரணின் பாதுகாப்பில் இருக்கிறார்.  ராஜ்கிரணின் குடும்பத்தை தாண்டி வரலட்சுமி நினைத்தது நிறைவேறியதா என்பதே சண்டக்கோழி 2 சொல்லும் மீதி கதை.

2005 இல் பார்த்த அதே விஷாலை படத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. விஷால் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது மதுரை வாசமும், அடிதடி ஆக்ஷனும்தான் அதற்கேற்றார் போல் ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து கட்டியிருக்கிறார். கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் அவர் பங்கு காமெடி செய்வது விஷாலை நக்கலடிப்பது என்று வழக்கமான கிராமத்து ஹீரோயின் செய்யும் கலாட்டாக்களை செய்கிறார்.


வரலட்சுமி அவர் உடல்வாகுக்கு ஏற்ற சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில்  இந்தப்படத்தில் வில்லியாக நடிதுள்ளது பிரமாதம். அதுவும் தமிழ் சினிமாவில் வில்லிக்கள் கம்மி அல்லவா  ? வெல்கம் டூ நியூ சொர்னாக்கா என்று கூட சொல்லலாம்.

ராஜ்கிரணை முதல் பாகத்தில் பார்க்கும் போது நமக்கு ஒரு மரியாதை கலந்த பயம் வரும்‌ அதே உணர்வு தான் நமக்கு இரண்டாம் பாகத்திலும் வருகிறது. நீங்க இன்னும் யங்தான் ராஜ்கிரண் சார் என்று சொல்ல தோன்றுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர்.

யுவனின் இசை படத்திற்கு எக்ஸ்ரா பலம். பாடல்களை கேட்பதை காட்டிலும் திரையில் பார்பதற்கு பிரமாதமாக உள்ளது. குறிப்பாக கம்பத்து பொண்ணு, செங்கறடான் பாறையில் போன்ற பாடல்கள் தூள். திருவிழா காட்சிகளை தத்துருபமாக படமாக்கிய சக்திவேல் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.

அஞ்சான் படத்தின் மூலம் நம்மை அலறவிட்ட லிங்குசாமி சண்டக்கோழி என்ற பழைய படத்திற்க்கு மேக்கப் போட்டு புதுபடமாக கொண்டுவந்திருக்கிறார் என்று நினைத்தால் முதல் பாதத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்மந்தபமே இல்லை.  முதல் பாகத்தை மைண்டில் வைத்து படத்திற்க்கு போனால் நமக்கு கிடைப்பதோ ஏமாற்றம் மட்டும் தான்‌. 

படத்தில் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, நடிகர்கள் தேர்வு என பார்த்து பார்த்து செய்த லிங்குசாமி கதையிலும், திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். நாம் முன்பு இது சண்டக்கோழியா இல்லை சாதா கோழியா என்று கேட்டிருந்தோம். இது நிச்சயம் சாதா கோழிதான். இருந்தாலும் கமெர்ஷியல் பட  விரும்பிகள் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.

Rating: 2.75/5

Related Posts:







No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages