Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 18, 2018

சண்டக்கோழி 2 ஃபர்ஸ்ட் ஆஃப் ஆசம் செகண்ட் ஆஃப் கொஞ்சம் மோசம் வசைபாடும் சமூக வலைத்தள மக்கள் !



லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் சண்டக்கோழி 2. இதில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், ராம்தாஸ், சண்முக ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


2005 ஆம் ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படம் சண்டக்கோழி. அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் சண்டக்கோழி 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது இந்நிலையில்லையில் படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தை பாரத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதை ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.
வடசென்னை படத்தோட மோதாதிங்கன்னு சொன்னா கேட்கனும். விதி என ஒருவர்  கூறியுள்ளார்.

கணவனை இழந்த பொண்ணோட பொட்டு மழையில அழியுற காட்சிய இன்னுமா குறியீடாக வைக்கீறீங்க ! தமிழ் சினிமா விளங்கிடும் என ஒருவர் கருத்து கூறியுள்ளார்.

சண்டக்கோழி 2 ஃபர்ஸ்ட் ஆஃப் ஆசம் செகண்ட் ஆஃப் கொஞ்சம் மோசம். இருந்தாலும் வரலட்சுமி சரத்குமார் கேரக்டர் நின்னு பேசும்னு ஒருவண் டி.ஆர் பாணியில்  சொல்லியுள்ளார்.

வந்த எல்லா படமும் நன்றாக இருந்தது. பாக்கெட்ல இருந்த காசும் காலி‌ மன்னிருங்க புரட்சி தளபதியின் என ஒருவர் நக்கலாக கூறியுள்ளார்

சண்டக்கோழி 2 இல் 2005 இல் பார்த்த அதே விஷால் ! அதே பவர் ! ராஜ்கிரணும் அதே மாதிரி உள்ளார். கீர்த்தி சுரேஷ் உங்க ரோல் செம. யுவன் பிஜிஎம் சூப்பர். செம படம் விங்குசாமி சார். வேற லெவல் என ஒருவர் படத்தை புகழ்ந்துள்ளார்.

சண்டக்கோழி 2 முதல் பாகம் அளவுக்கு இல்லை. இருந்தாலும் டிசன்ட் கமர்ஷியல் எண்டர்டெய்னர் என்று ஒருவர் கூறியுள்ளார்.

சண்டக்கோழி 2 ஃபர்ஸ்ட் ஆப் ஓகே ! செகண்ட் ஆஃப் காக வையிட்டிங் என ஒருவர் கூறியுள்ளார்.

சண்டக்கோழி 2 ஒரு மணிநேரத்திற்கு பிறகு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை, புதுசாக ஒன்றும் இல்லை, காமெடி இல்லை, விஷால் என்ட்ரி  நன்றாக இல்லை, கீர்த்தி யோவ் யோவ் என அடிக்கடி சொல்கிறார் ( கிராமத்துபொண்ணாம்) , சும்மா சும்மா பாடல்கள். என்று கூறிவிட்டு செகண்ட் ஆஃப் ஆவது சூடுபிடிக்குமா என்று பார்ப்போம் என்று ஒருவர் கூறினார்.

சண்டக்கோழி 2 லிங்குசாமியின் ஆட்டம் ஆரம்பம். பேக் டூ ஃபார்ம் ! பக்கா ப்ளாக் பஸ்டர் ! விசில் பறக்கும் காட்சிகள் என ஒருவர் கூறியுள்ளார்.



சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages