Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 20, 2018

பேட்ட சூட்டிங் ஓவர் !


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பேட்ட. இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும். விஜய் சேதுபதி, சசிக்குமார், பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஜீன் மாதம் டார்ஜிலிங்யில் தொடங்கிய பேட்ட படத்தின் படப்பிடிப்பு  டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய இடங்களில் நடைபெற்றது. அவ்வபோது அங்கு இருந்து சில புகைப்படங்களும் கசிந்தது. இந்நிலையில் பேட்ட படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
"பேட்ட படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. திட்டமிட்ட நாட்களில் இருந்து  15 நாட்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்துள்ளோம். சன் பிக்சர்ஸ், கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு மற்றும் மொத்த படக்குழுவுக்கு நன்றிகள். இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்" இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.


கடைசி நாள் சூட்டிங் முடிவில்  படக்குழுவினர் கேக் வெட்டிகொண்டாடியுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages