"அவன் ஒரு கார்ப்பரேட் மான்ஸ்டர்" என வரலட்சுமியின் வசனத்தில் இருந்து ஆரம்பிக்கிறது சர்கார் டீசர். சர்கார் படத்தில் தளபதி என்ட்ரி எப்படி இருக்கும் என்று தெரியவில்லை டீசரில் அவர் என்ட்ரி மரண மாஸ் என்று சொல்லலாம்.
படத்தின் கதையை சுருக்கமாக சொல்லிவிடலாம் ஓட்டு போடுவதற்காக இந்தியா வரும் விஜயின் ஓட்டை யாரோ மாத்தி போட்டு விட அந்த சம்பவத்தினால் விஜய்க்கு சர்காரை ஆள்பவர்கள் மீது எழும் கோபம் தான் இந்த சர்கார் என நமக்கு புரிகிறது.
கீர்த்தி சுரேஷ்யை காட்டிலும் வரலட்சுமிக்கு தான் படத்தில் ஸ்ட்ராங்கான ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக கத்தி படத்தில் சமந்தா விஜயுடன் டிராவல் செய்தது போல கீர்த்தி சுரேஷ் இதில் படம் முழுக்க டிராவல் செய்வார் போல !
ராதாரவி, பழ.கருப்பையா என இருவேறு கட்சி தலைவர்களை எதிர்த்து விஜய் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது விஜயை அழிக்க இருவரும் இணைவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என நம்மால் யூகிக்க முடிகிறது.
படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாய் யோகி பாபு இருப்பார் என எதிர்பார்கலாம். மேலும் இதில் காமெடியனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும் கலக்கியிருபார் போல !
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை படத்தில் ஆங்காங்கே தூவி இருப்பது டீசரை பார்க்கும்போது நமக்கு தெரிகிறது.
மொத்தத்தில் இந்த வருடம் தளபதி ரசிகர்களுக்கு சரவெடி தீபாவளி கிடையாது சர்கார் தீபாவளி தான்.
No comments:
Post a Comment