Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 9, 2018

சர்காருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சூப்பர் ஸ்டார்


தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் அமைச்சர்கள் கண்டனம், தொண்டர்கள் போராட்டம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு படிக்கு மேலாக சென்று நேற்று சில திரையரங்கில் சர்கார் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பேனர்கள் கிழிக்கப்பட்டது.

இந்த செயல்களை கண்டித்தும் சர்கார் படத்திற்க்கு ஆதரவாகவும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சர்கார் படத்திற்க்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் "தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு அந்த படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கவேண்டும் என போராட்டம் நடத்துவதும், திரையிட தடுப்பதும் , படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்க்கு புறம்பான செயல்கள். இதுபோன்ற செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என கூறியுள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages