Breaking

Post Top Ad

Your Ad Spot

Dec 3, 2018

விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை ! இது விஜய்சேதுபதி 25 கொண்டாட்டம்


விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படம் ரிலீஸ்க்கு  முன்னரே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டிரைலருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பே அதற்கு சாட்சி.

படத்திற்கு படம் வித்தியாசத்தை காட்டும் விஜய் சேதுபதி சீதக்காதியில் அய்யா ஆதிமுலம் என்ற வயதான கலைஞனாக நடித்துள்ளார். வரும் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ள சீதக்காதி திரைப்படத்தின் விளம்பர பணிகளை படக்குழு துவங்கிவிட்டனர்.

முதல் கட்டமாக  அய்யா ஆதிமூலத்தின் மெழுகு சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இயக்குனர் மகேந்திரன் திறந்துவைத்தார்.

மெழுகால் ஆன அய்யா ஆதிமூலத்தை பார்க்க விஜய் சேதுபதி ரசிகர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages