தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருவதால் ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல பத்திரிக்கைக்கு இயக்குனர் சிவா பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் விஸ்வாசம் படத்தை அஜித் பார்த்துவிட்டு நாம் பணியாற்றிய நான்கு படங்களில் இதுதான் பெஸ்ட் என கூறி மனதார பாராட்டினாராம். இந்த தகவலை சிவா கூறி நெகிழ்ந்துள்ளார்.
No comments:
Post a Comment