Breaking

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

சர்காரை பின்னுக்கு தள்ளிய சூப்பர் ஸ்டாரின் பேட்ட!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. சிம்ரன், த்ரிஷா ஆகியோர் கதாநாயகியாகளாக நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான பேட்ட திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. இது வசூலிலும் பிரதிபலித்துள்ளது.

சென்னையில் மட்டுமே பேட்ட திரைப்படம் இதுவரை 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னை வசூலில் 15 கோடி வரை வசூல் செய்து மூன்றாவது இடத்தில் இருந்த சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளி பேட்ட மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சென்னையில் வசூலில் முதலிடத்தில் 2.0 படமும், இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages