பாடல்
சிம்ராங்காரன் இந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேக். நிச்சயம் இந்த பாடலை எழுதியதற்காக கானா பாடுபவர்களிடம் ஒரு வார டிரைனிங் எடுத்திருப்பார் போல ! ஏனெனில் புரியாத பல வார்த்தைகள் பாடலுக்கு நடுவே வந்து வந்து போகிறது. "பல்டி பக்குற டர்ல உடனும் பல்த்து" என்ற வார்த்தையில் ஆரம்பிக்கும் சிம்டாங்காரன் பாடலுக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க நாமும் கானா கிளாஸ் போகனுமோ என்று தோன்றுகிறது.
இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலைதான் எழுதியிருக்கிறார் .
பாடியவர்கள்
பாம்பா பாக்கியா, விபின் அனிஜா, அபர்னா நாராயணன் போன்றோர் இப்பாடல் பாடியுள்ளார். ஒரு புறம் பாம்பா பாக்கியா, விபின் அனிஜா போன்றவர்களின் கானா குரல் நம்மை ஆடவைக்கிறது மறுபுறம் அபர்ணா நாரயணின் இனிமையான குரல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அடுத்ததாக நம்ப ஏ.ஆர்.ரகுமான். அவரை நாம் ராஜகுரு போல இசை குரு என்றே அழைக்கலாம். கானா சாங்கையும், மெலடி சாங்கையும் சேர்த்து மாடர்ன் சாங்கா குடுக்க அவரால் மட்டும்தான் முடியும். மொத்தத்தில் மெர்சல் படத்தில் ஆளப்போறன் தமிழின் என்று நம்மை ஆளவைத்த அவர் சிம்டாங்காரனில் நம்மையெல்லாம் ஆடவைத்திருக்கிறார்.
சிம்டாங்காரன் பாடலை பார்க்க - Click
Super
ReplyDelete