96 திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும் போதும் சரி பாடல்கள் கேட்கும் போதும் சரி படத்தின் முக்கிய ஹீரோ காதல் என்று நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை மறந்து மனம் மாறி இணைந்தாலும் இணையும் ஆனால் தமிழ் சினிமாவில் காதல் போர்ஷன் மட்டுமோ என்றைக்கும் மாறாது. சற்றும் சலிப்படையாமல் நமக்கு திரும்ப திரும்ப அரைத்த மாவையே அறைத்துக்காட்டுவார்கள். இந்த வழக்கமான காதல் கதையிலிருந்து வேறுபட்டு இருக்கிறதா 96 விமர்சனத்தை பார்க்கலாம்.
போட்டோகிராபி கற்றுக்கொடுக்கும் ராம் (விஜய் சேதுபதி) தனது மாணவர்களுடன் தஞ்சாவூருக்கு செல்கிறார். சென்ற இடத்தில் தன் படித்த பள்ளியை பார்த்த அவர் உள்ளே செல்ல தன் பழைய நண்பர்கள் காதல் என் எல்லாமே நினைவுக்கு வருகிறது உடனே தன்னுடன் படித்த பழைய நண்பர்கள் அனைவரையும் ஒரு நாள் சந்திக்க சென்னையில் ஏற்பாடு செய்கிறார். அங்கு நடக்கும் நிகழ்வே "96"
படத்தில் விஜய்சேதுயின் பெயர் ராம், த்ரிஷாவின் பெயர் ஜானு இருவரும் அந்த கதாபாத்திரங்களாக நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக உள்ளது. விஜய்சேதுபதி எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்ட்டா நடிப்பவர். அது போல் த்ரிஷா 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்திருந்தாலும் த்ரிஷா என்றவுடன் நமக்கு ஜெஸி தான் நினைவுக்கு வரும் இனிமேல் ஜானுவும் நினைவுக்கு வரும்.
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் சி.பிரேம் குமார். ஒரு சில காதல் காட்சிகள் நம்மை கிறங்க அடிக்கிறது. இரண்டாவது பாதிக்கு மேல் விஜய்சேதுபதி த்ரிஷா என இரண்டு கதாபாத்திரங்களுடன் மட்டுமே நாம் பயணித்தாலும் எந்த இடத்திலும் நமக்கு சலிப்பு தட்டவில்லை. இயக்குனர் கவனமாக கையாண்டு இருக்கிறார் பாராட்டுக்கள்.
என்னதான் காதல் கதை என்றாலும் அதை பிண்ணனி இசையோடு சேர்த்து திரையில் பார்க்கும்போதுதான் கதைக்கு உயிர்கொடுத்தது போல உள்ளது அந்த வகையில் கோவிந் மேனன் சரியாக செய்துள்ளார். அந்தாதி, காதலே காதலே பாடல்கள் எக்ஸ்ட்ராவாக நம்மை கவர்கிறது. மகேந்திரன் ஜெயராஜ் , சண்முக சுந்தரம் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காட்சிக்கு காட்சி அழகாக படமாக்கியுள்ளனர் சபாஷ்.
மொத்தத்தில் 96 நாம் மறந்த பள்ளிப்பருவத்தை ஒரு சில மணிநேரங்கள் நம் கண் முன் கொண்டுவந்து மறைகிறது.
No comments:
Post a Comment