Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 2, 2018

இந்தி டப்பிங்கில் அதிக பேர் பார்த்த தமிழ் படம் ஸ்கெட்ச்


இந்தி டப்பிங்கில் தற்போது யூடியூப்பில் வெளியாகி அதிக பேர் பார்த்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை சீயான் விக்ரமின் ஸ்கெட்ச் திரைப்படம் பெற்றுள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கிய படம் ஸ்கெட்ச். இதில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். சூரி, பாபு ராஜ், ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான ஸ்கெட்ச் திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றது.இந்நிலையில்  இரண்டு வாரத்திற்க்கு முன்பு இந்த படத்தின் இந்தி டப்பிங் யூடியூப்பில் வெளியானது. அதை இதுவரை 26 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதனால் இந்தி டப்பிங்கில் தற்போது வெளியாகி அதிக பேர் பார்த்த தமிழ் படம் என்ற பெருமையை ஸ்கெட்ச் திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் விவேகம், ரெமோ, தெறி போன்ற படங்களையும் அதிக பேர் பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages