Cast: Thalapathy Vijay, Keerthi Suresh, Varalaxmi Sarthkumar
Music: A.R.Rahman
Lyrics: Vivek
Direction: A.R.Murugadoss
Producer: Kalanidhi Maran
Label: Sony Music
Simtaangaran: Singers- Bamba Bakya, Vipin Aneja, Aparna Narayanan
சென்னையில் பேசும் வார்த்தைகளை அடுக்கடுக்காக நிரப்பி விவேக் சிம்டாங்காரன் பாடலை எழுதியுள்ளார். பாடல் நமக்கு புரியாமல் போனது தான் மைனஸ் இருந்தாலும் ரகுமானின் பிண்ணனி இசை மைனஸ்யையும் பிளஸ் ஆக்கிவிட்டது முதலில் பாடல் நமக்கு பிடிக்காமல் போனாலும் கேட்க கேட்க பிடித்துப்போகிறது. அபர்ணா நாராயணின் குரல் இந்நேரம் பல செல்போன்களின் ரிங்டோன் ஆகியிருக்கும் பிரமாதம்.
ஜன கன மன, எல்லா புகழும் இறைவனுக்கே, இந்தியனே வா அந்த வரிசையில் ஒரு விரல் புரட்சி தந்துள்ளார் ரகுமான். பாடல் வரிகள் நம்மை ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. இந்த ஒரு பாடலுக்காகவே விவேக்கிற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். பாடல் முழுக்க ஒலிக்கும் டிரம்ஸ், கிட்டார், பியானோ போன்ற இசை கலவையாக வந்துப் போகிறது. ஸ்ரீநிதி வெங்கடேஷ் சிறு வரி மட்டுமே பாடியிருந்தாலும் அது ஒரு விரல் புரட்சிக்கு எக்ஸ்ட்ரா பலம் சேர்க்கிறது.
ரகுமானின் தொடாத பாடல் ஸ்டைலே கிடையாது. அதில் டாப் டக்கரையும் இணைத்துக் கொள்ளலாம். டாப் டக்கர் வித்தியாசமான ஜாலியான பாடல். வரிகளில் எந்த குழப்பமும் இல்லை இயல்பான ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல். திரையில் பார்பதற்கு இந்த பாடலின் பலம் கூடும்.
சிம்டாங்காரனில் சென்னை பாஷையை பயன்படுத்திய விவேக் இதில் OMG, ILY, IMO, IBK, KIT, IDK, CG என நிறைய Shortend வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார். மெர்சலில் மேச்சோ பாடலை தந்துவிட்டு இதில் ஏமாற்றிவிடுவாரோ என நினைத்தோம் அந்த குறையை OMG பொண்ணு தீர்ந்துவிட்டது. OMG பொண்ணு ஒரு ஜாலியான காதல் பாடல்.
"ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிற்கும் , ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்" என்று கலர்புல்லான வரிகள் ரகுமானின் இசையில் "CEO in The House" நம்மை ஆடவைக்கிறது. இது படத்தில் ஒரு பவர்ஃபுல்லான பாடலாக இருக்கும் . மொத்தத்தில் "CEO in The House" எக்ஸ்ட்ரா வரிகள் எக்ஸ்ட்ரா இசை பிரமாதம்.
Rating: 3.75/5
No comments:
Post a Comment