Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 5, 2018

ராட்சசன் - விமர்சனம்


Cast: Vishnu Vishal, Amala Paul
Director: Ramkumar
Music: Ghibran
Cinematography: P.V. Shankar
Banner: Axess Film Factory

தமிழில் த்ரில்லர் படம் வருவது என்பது அபூர்வம். அப்படி வந்தாலும் நம்மை கவரும் வகையில் இருப்பது என்பது மிக மிக அபூர்வம் அப்படி சமீபத்தில் வெளிவந்த நம்மை கவர்ந்த படங்கள் இமைக்காமல் நொடிகள், யுடர்ன். அந்த வரிசையில் நேற்று வெளிவந்திருக்கும் த்ரில்லர் படம் ராட்சசன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா ! இல்லை கவர தவறியதா என்பதை பார்ப்போம்.

விமர்சனம்

உதவி இயக்குனராக இருக்கும் விஷ்ணு விஷால் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு பல முயற்சிகளை செய்து வருகிறார். அந்த முயற்சியில் விஷ்ணுவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போக தன் மாமா முனிஸ்காந்தின் கட்டாயத்தால் போலீஸில் சேருகிறார். விஷ்ணு பதவியேற்ற இரண்டே நாளில் ஒரு பள்ளி சிறுமி கடத்தப்பட்டு கொடுரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை குறித்து விசாரித்து வருகையில் அடுத்தடுத்த சிறுமிகள் கொல்லப்படுகின்றனர். 

இந்த கொலைகளை யார் செய்கிறார் என்ற குழப்பத்தில் தடயங்களை தேட ஆரம்பிக்கிறார் விஷ்ணு விஷால். இதற்கிடையில் பள்ளி ஆசிரியரான அமலாபாலுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் பழக்கம் ஏற்ப்படுகிறது. ஒரு கட்டத்தில் அமலாபால் வகுப்பில் படிக்கும் விஷ்ணு விஷாலின் அக்கா மகளும் கடத்தப்படுகிறார். இப்படி தொடர்த்து குழந்தைகளை கடத்தி கொலை செய்வது யார் விஷ்ணு விஷால் அவரை  கண்டுப்பிடித்தாரா ? தன் அக்கா மகளை மீட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை.


விஷ்ணு விஷால் ஒரு வழியாக காமெடி டிராக்யில் இருந்து வெளியே வந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் தன் பழைய டிராக்கிற்கு வந்துவிட்டார். போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் கட்சிதமாக பொருந்துகிறார். அது சரி போலீஸ் ரத்தம் அல்லவா  அப்படித்தான் இருக்கும். அமலாபாலுக்கு படத்தில் பெரிய கதாபாத்திரம் இல்லையென்றாலும் தான் வரும் இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

த்ரில்லர் படத்தில் காமெடி வைத்தால் வொர்க் அவுட் ஆகாது என இயக்குனர் நினைத்திருப்பார் போல அதனால்  முனிஸ்காந்த், காளி வெங்கட் இருவருமே  சீரியஸ் ரோலில் நடித்துள்ளனர். சூசேன் ஜார்ஜ் மைனாவுக்கு பிறகு இதில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

த்ரில்லர் படத்திற்க்கு முக்கிய அம்சம் இசையும் ஒளிப்பதிவும் தான் அதை ஜிப்ரானும், பி.வி. சங்கருக்கு சரியாக செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் ஜிப்ரானின் பிண்ணனி இசை நம்மை பயப்பட வைக்கிறது. படத்தின் இயக்குனர் ராம்குமார் முண்டாசுப்பட்டி என்ற காமெடி படம் கொடுத்துவிட்டு நீண்ட இடைவேளைக்கு பின் ராட்சசனை நமக்கு கொடுத்துள்ளார். சரியான கதைக்களம் எடுத்துக் கொண்டு முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்திய இயக்குனர் இரண்டாம் பாதியிலும் அதே கவனத்தை செலுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் நமக்கு சலிப்பு தட்டுகிறது. இருந்தாலும் இயக்குனரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள். மொத்தத்தில் ராட்சசன்  ஆரவாரம் இல்லாமல் வந்து மிரட்டியிருக்கிறான்.

Rating: 3/5

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages