Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 5, 2018

நோட்டா - விமர்சனம்


Cast: Vijay Devarakonda, Mehreen Pirzada, Sathyaraj, Nasser, Yaashika Aanaand, Sanchana Natraj, Ms.Baskar

Cinematographer: Santhana Krishnan Ravichandran

Music: Sam C.S

Director: Anand Shankar

Producer: K.E.Gnanavel Raja


அர்ஜீன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ஃபேமஸ் ஆனவர் விஜய் தேவரகொண்டா. பல படங்களில் நடித்து கிடைக்க வேண்டிய புகழை ஒரே படத்திலேயே அள்ளிவிட்டார். அப்படி பட்ட நடிகர் தமிழில் அறிமுகமாகிறார் என்றதும் நமக்கு எதிர்பார்ப்பு எகிறியது. அதுவும் அரசியல் பேசும் படம் என்பதால் நாம் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே போனாம். இந்த எதிர்பார்ப்புக்கு சரியான பரிசை நோட்டா  கொடுத்ததா என்பதை பார்ப்போம்.

விமர்சனம்

மாநில முதல்வரும் விஜய் தேவரகொண்டாவின் அப்பாவும் ஆகிய நாசர் எதிர்பாராத விதமாக ஊழல் வழக்கில் சிக்குகிறார். இதனால் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை தற்காலிக முதல்வராக பணியமர்த்தி விட்டு ஊழல் வழக்கை எதிர்கொள்கிறார். எதிர்பாராத விதமாக வழக்கு நாசருக்கு முரணாக போக அந்த வழக்கில் இருந்து நாசர் எப்படி விடுபட்டார் ? அதுவரை விஜய் தேவர்கொண்டா தன் பதவியை தக்கவைத்துக் கொண்டாரா ? என்பதே மீதி கதை.


தமிழில் உச்ச நடிகருக்கு கிடைக்கும்  வரவேற்பு விஜய் தேவரகொண்டாவுக்கு கிடைத்திருக்கிறது. வசனம் பேசுவதிலும் சரி, நடிப்பிலும் சரி தனக்கே உரித்தான மாஸ் பாணியில் சரியாக செய்துள்ளார். சத்தியராஜ், நாசர் இருவருமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என  நிருபிக்கும் வகையில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாயகிகள் சஞ்சனா நடராஜ், மெஹ்ரீன் கவுர் இருவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக சஞ்சனா ஸ்கோர் செய்யும் காட்சிகள் படத்தில் நிறைய உள்ளது. பிக்பாஸ் புகழ் யாசிகா, கருணாகரன் இருவருக்கும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சரியாக செய்துள்ளனர்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் ஒவ்வொரு படத்திலும் தன் வித்யாசத்தை நமக்கு காண்பிக்கிறார். குறிப்பாக தமிழகத்தில் நடந்த சில சம்பவங்களை படத்தில் ஆங்காங்கே தூவி இருப்பது பிரமாதம். பிண்ணனி இசையில் கவனம் செலுத்திய சாம் சி.எஸ் பாடல்களிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். சந்தான கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியாக உள்ளது. மொத்தத்தில் படத்தில் சில காட்சிகளையும் சற்று வெட்டி இருந்தால் நோட்டாவுக்கு இன்னும் கொஞ்சம் வாக்குகள் கிடைத்திருக்கும் என்பது எங்கள் கருத்து.

Rating: 3/5







No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages