Breaking

Post Top Ad

Your Ad Spot

Oct 10, 2018

விஜயதசமி அன்று விஜயிசம் ! விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்


விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்க்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்தின் டீசர் அக்டோபர் 19 ஆம் தேதி விஜயதசமி அன்று வெளியாகவுள்ளது. இந்த செய்தியை சன்பிக்சர்ஸ் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் #SarkarTeaserOn19th என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் டிரண்ட் செய்துவருகின்றனர். மேலும் விஜயதசமி அன்று விஜயிசம் என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages