Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 3, 2018

சன் டிவியிடம் வேண்டுகோள் விடுத்த த்ரிஷா !


விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 96.

படம் வெளியாகி பல வாரங்கள் கடந்தும் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறையவில்லை.  அந்த அளவுக்கு இந்தபடம் ரசிகர்களை ஈர்த்துள்ளது

இந்நிலையில் வரும் தீபாவளி அன்று 96 படத்தின் பிரிமியர் சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ளது.

96 திரைப்படம் ஒளிப்பரப்புவதை குறித்து சன் டிவியிடம் த்ரிஷா ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் "எங்கள் படம் வெளியாகி 5 வாரம் ஆகிறது.எண்பது சதவீத தியேட்டர்களை எங்கள் படம்தான் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் உங்கள் தொலைகாட்சி 96 பிரிமியரை ஒளிப்பரப்புவது நியாயமில்லை என எங்கள் படக்குழு நினைக்கிறது. தயவு செய்து 96 பிரிமியரை பொங்கலுக்கு தள்ளி வைக்கும் படி  உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு த்ரிஷா அதில் கூறியுள்ளார்.

அத்துடன் #Ban96MoviePremierOnSunTv என்ற ஹேஸ்டேக்கையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages