ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் பில்லா பாண்டி விஜயின் சர்காருடன் நேரடியாக போட்டி போட உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.
நேற்றைய முன்தினம் வெளியான பில்லா பாண்டி டிரைலரின் மீது மோசமான விமர்சனங்களை வந்துள்ளது. அதற்கு பதிலளித்த ஆர்.கே.சுரேஷ் " வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக டிரைலரை கட் செய்து வெளியிட்டோம். நாங்கள் நினைத்திருந்தால் படத்தில் இருக்குற இரண்டு மூன்று நல்ல சீன்களை கட் செய்து இதுதான் டிரைலருன்னு மக்களை ஏமாத்திருக்கலாம் ஆனா அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் படமாக பார்த்தால் பில்லா பாண்டி நூறு சதவீதம் உங்களை திருப்திப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment