Breaking

Post Top Ad

Your Ad Spot

Nov 6, 2018

சர்கார் - விமர்சனம்


Cast: Thalapathy Vijay, Keerthi Suresh, Varalaxmi Sarthkumar
Music: A.R.Rahman
Cinematography: Girish Gangatharan
Direction: A.R.Murugadoss
Producer: Kalanidhi Maran
Banner: Sun Pictures
Release Date: 06 November 2018

துப்பாக்கி, கத்தி என்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம் சர்கார். கதை சர்ச்சை, தமிழ் ராக்கர்ஸ் சவால் என ஏகப்பட்ட சலசலப்பு கிடையே வெளியான சர்கார் ரசிகர்களின் பெருவாரியான வாக்குகள் பெற்றதா இல்லை நோட்டாவுடன் போட்டி போட்டதா என்பதை பார்ப்போம்.

விமர்சனம்

சர்கார் கதை குறித்து நாம் சொல்லவே தேவையில்லை ஏனெனில் கதையை எழுத்தாளர் சங்க தலைவர் இன்ச் பை இன்சாக மீடியா முன் கக்கிவிட்டார். கதை ஏற்கனவே அனைவரும் தெரிந்ததால் ஒருவித எதிர்பார்ப்பு இல்லாமல் போனது. அதுவே படம் மைனஸ் ஆனதற்கும் ஒரு காரணம்.

ஒட்டு மொத்த படத்தையும் தனி ஒரு ஆளாய் தளபதி விஜய் மட்டுமே தாங்கி பிடிக்கிறார். ஆக்ஷன், டயலாக், டான்ஸ் என அனைத்திலும் பொழந்து கட்டுகிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி ஆகியோரின் நடிப்பு தூள்.

சர்கார் படத்தில் மட்டுமில்லை சமீபத்தில் வந்த சில படங்களிலும் மைனஸ் கீர்த்தி சுரேஷ் தான். தமிழ் திரைப்படங்களில் நடிகைக்கான முக்கியத்துவம் குறைவுதான் அதை சரியாய் பயன்படுத்திய நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியும். கீர்த்தி சுரேஷ் இதை புரிந்துக்கொண்டால் அவருக்கு நல்லது. அதே போல் யோகி பாபு கதாபாத்திரமும் படத்தில் பெரிதாக ஒர்கவுட் ஆகவில்லை.


ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தாலும் பெரும்பாலும் டாப் டக்கர் பாடலையே பிண்ணயில் பயன்படுத்தியுள்ளார். OMG பொண்ணு, டாப் டக்கர் போன்ற பாடல்களை கேட்கவும் திரையில் பார்க்கவும் பிரமாதம். கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்தின் வலுவை கூட்டுகிறது.

டெக்னிக்கலாக ஒரு ஸ்ட்ராங்கான படத்தை குடுத்த முருகதாஸ் கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். துப்பாக்கி படத்திலும், கத்தி படத்திலும் திரைக்கதையின் மூலம் நம்மை சிலிர்க்க வைத்த முருகதாஸ் சர்காரில் மூலம் கொஞ்சம் சறுக்க வைத்துவிட்டார்.

Verdict: விஜய் எனும் நிழல் உலக தளபதியை நிஜ சர்காருக்கு அழைத்து செல்லும் பயணத்தில் சிறு சறுக்கல்.


சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages