Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 15, 2019

பேட்ட, விஸ்வாசம் படங்கள் தமிழகத்தில் மட்டுமே 200 கோடி வரை வசூல் செய்யும்!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் அஜித் நடித்துள்ள பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் கடந்த வாரம் ஒரு நாளில் வெளியானது. இதனால் திரையரங்குகள் முழுக்க திருவிழா கோலம் பூண்டுள்ளன.

இவ்விரு படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே நேரத்தில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் வசூல் தமிழகத்தில் மட்டும் 200 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

புது வருட ஆரம்பத்திலே 200 கோடி வரை வசூல் என்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி பேட்ட, விஸ்வாசம் படங்கள் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages