Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 11, 2019

இம்மாதம் தொடங்குகிறது இந்தியன் 2 படப்பிடிப்பு!


உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கிறது என்றும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது.

இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாம். பொள்ளாச்சி, உக்ரைன் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages