Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 15, 2019

ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த இந்தியன் 2 படக்குழு!


உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன்.
 
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கிறது என்றும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பின்றி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில் படக்குழு இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அத்தோடு படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்க உள்ளது என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages