Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 23, 2019

இந்தியன் 2வில் சிம்பு நடிக்காததற்கு காரணம் இதுவா?


சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை அடுத்து சிம்பு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அண்மையில் வெளியானது.

பின்னர் அப்படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாகவும் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. எதனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து விலகினார் என்ற சரியான காரணம் அப்போது தெரியவில்லை.


ஆனால் தற்போது அந்த செய்தி குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்ட பொழுது சிம்பு உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு, சீமானின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் என பல படங்கள் அவர் லைன் அப்பில் இருப்பதால் கால் சீட் பிரச்சினை வரும் என ஷங்கரே முடிவு செய்து சிம்பு நடிக்க விருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages