தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ள படம் தளபதி 63. இப்படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் பிரி புரொடக்சன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வரும் ஜனவரி 21 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக ஜனவரி 20 ஆம் தேதி சிறப்பு பூஜை ஒன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ள தளபதி 63 படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment