Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 13, 2019

பேட்ட, விஸ்வாசம் மூன்றாவது நாள் சென்னை வசூல் விவரம் இதோ ! யார் டாப் தெரியுமா?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படமும் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இரு திரைப்படங்களும் நல்ல வசூல் ஈட்டி வருவதால் தயாரிப்பு நிறுவனம் படு குஷியில் உள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை விஸ்வாசம் படத்தை காட்டிலும் பேட்ட படத்தின் வசூல் நன்றாக உள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதன் படி மூன்றாவது நாளான நேற்று சென்னையில் மட்டும் பேட்ட திரைப்படம் ரூ 1.29 கோடியும், விஸ்வாசம் ரூ 1.04 கோடியும் வசூல் செய்துள்ளது.

சென்னை வசூலை பொறுத்தவரை பேட்ட திரைப்படம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் இரு திரைப்படங்களின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages