Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 14, 2019

100 கோடியை கடந்த பேட்ட!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சிம்ரன், த்ரிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பல வருடங்களுக்கு பிறகு ஸ்டைலான, மாஸான சூப்பர் ஸ்டாரை பேட்ட படத்தின் மூலம் பார்க்க முடிந்தது என பலரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த வியாழன் அன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பேட்ட உலகம் முழுவதிலும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 2.0 திரைப்படம் 1000 கோடி கிளப்பில் இணைய உள்ள நிலையில் இந்த செய்தி சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages