சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் பழைய ஸ்டைலையும், மாஸையும் கார்த்திக் சுப்புராஜ் மீட்டெடுத்து வந்துவிட்டார் என கார்த்திக் சுப்புராஜை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜீடன் மீண்டும் ஒருமுறை சூப்பர் ஸ்டார் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கும் ரஜினிகாந்த்.
அப்படத்தை முடித்து கொடுத்த பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜீடன் இணைவார் என கூறப்படுகிறது.
இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஸ்டைலான விருந்து காத்திருப்பது உறுதி.
No comments:
Post a Comment