Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 24, 2019

அஜித் சரியாக சொன்னார்! நான் விஸ்வாசம் பார்க்கப்போகிறேன் - பிரபலத்தின் கருத்தால் ரசிகர்கள் குஷி


தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.  இது ஒருபுறம் இருக்கையில் தல ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்து சர்ச்சையை ஏற்படுத்தியது தற்போது மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.

இந்த செயலால் கடுப்பான‌ அஜித் ஒரு நீண்ட அறிக்கையை சில நாட்களுக்கு முன்  வெளியிட்டிருந்தார். அதில் தன் அரசியல் பார்வை குறித்த தெளிவான கருத்துக்களை முன்வைத்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் பிரபல பாடகர் சஞ்சைய் சுப்ரமணியம் அஜித் சரியாக சொன்னார். நான் விஸ்வாசம் படம் பார்க்க போகிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages