சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் பேட்ட திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை இளம் இயக்குநரும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகருமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் என எல்லாம் வெளியாகி ஹிட் ஆன நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பொங்கலுக்கு பேட்ட படத்துடன் நேரடியாக தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் மோத உள்ளது.
இதனால் திரையரங்கங்கள் பிடிப்பதில் தீவிர போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேட்ட திரைப்படம் கர்நாடகாவில் மட்டும் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக பிரபல விநியோகத்தர் ஜாக் மஞ்சு தெரிவித்துள்ளார்.
இதனால் அங்குள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
No comments:
Post a Comment