தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தளபதி விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது.
இது ஒருபுறம் இருக்க விஜய் சசிக்குமார் இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் வைரலானது. இதற்காக சசிக்குமார் பிரபல இயக்குனர் ராஜமெளலி சந்தித்தது போன்ற புகைப்படங்கள் கசிந்தது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் விஜய் சில காரணங்களால் இப்படத்தில் நடக்க மறுத்து விட்டாராம். இதனால் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment