சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஐந்து படங்களில் நடிக்க இருக்கிறார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.
அதில் ஒன்று ஏ.ஆர்.முருகதாஸ் படம். இக்கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. இப்படத்தை பற்றிய தகவல் எதுவும் வராதா என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் செய்தி ஒன்று கசிந்துள்ளது.
அது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸின் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாம். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment