ஒட்டுமொத்த தல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்ததாக ப்ரோமோஷன் மற்றும் டிக்கெட் முன்பதிவு படு வேகமாக நடைபெற்று வருகிறது.
பல முன்னணி திரையரங்குகளில் ரிசர்வேஷன் தொடங்கி மளமளவென டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டது. இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான ரோஹிணி சினிமாஸில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளது.
இதனால் தல ரசிகர்கள் முன்பதிவு ஆர்வமாக செய்ய காத்திருக்கின்றனர்.
#Viswasam 1st day #Rohini Koyambedu regular show counter bookings will open by 4 PM tomorrow💥💥💥 #Adchithooku #ViswasamதிருவிழாAtRohini #FansfortRohini pic.twitter.com/2DZFeMYSMb— Rohini SilverScreens (@RohiniSilverScr) January 4, 2019
No comments:
Post a Comment