Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 5, 2019

தமிழர் என்பது அடையாளமல்ல, முகவரி விழாவில் கமல் பேச்சு


கமல்ஹாசன் தீவிர அரசியல் பயணத்தை மேற்கொண்டு இருப்பதால் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்தியன் 2 தான் என் கடைசி படம் என்று சில நாட்களுக்கு முன் அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு ராயப்பேட்டை YMCA மைதானத்தில் "பொங்கு தமிழ் 2019" என்ற விழாவை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பேசிய கமல்ஹாசன் "தமிழர் என்பது அடையாளமல்ல, முகவரி. தமிழை வளர்ப்பது தமிழர்கள் தான். பல கலைகள் எனக்கு புரியும். இப்போது தான் கலைகள் எனக்கு பிடிக்கிறது.

பள்ளியை விட்டு நின்ற பிறகு பள்ளியின் அருமை தெரிகிறது. அதுபோல நடிப்பை நிறுத்திய பிறகு தான் நடிப்பின் அருமை எனக்கு தெரிகிறது. என்று பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages