Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 29, 2019

அஜித்திற்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதா? வியந்து கூறிய நடிகை!


தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. டி.இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்த சாக்ஷி அகர்வால் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் விஸ்வாசம் படத்தில் என்னுடைய ரோல் சிறியது தான். ஆனால் அதை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் கொண்டு சென்றது அஜித் ரசிகர்கள் தான்.

இப்போது தான் எனக்கு தெரிகிறது. அஜித்திற்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்று என வியந்து  கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages