சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சிம்ரன் மற்றும் த்ரிஷா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேட்ட திரைப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.
அது என்னவென்றால் பேட்ட படத்தில் முதலில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் மீரா மிதுன் தானாம். ஒரு சிறிய நூலிழையில் வாய்ப்பு தவறவிட்டாராம். அதன் பிறகே மீரா மிதுன் நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மீரா மிதுன் இதற்கு முன் தானா சேர்ந்த கூட்டம், கிரகணம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment