தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான 3(மூன்று) படத்தில் இடம்பெற்ற பாடல். ஒய் திஸ் கொலவெறி டி. இன்று வரை தனுஷ் ரசிகர்கள் பலரின் பேவரிட் பாடல் இதுதான் என்று கூட சொல்லலாம்.
இப்பாடல் வெளியாகி 28 நாட்களிலேயே 20 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்தது. அனிருத் இசையமைத்த இந்த பாடலை தற்போது வரை 17 கோடியே 37 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மாரி 2 படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த சாய் பல்லவி நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் இடம் பெற்ற வச்சிண்டே என்ற பாடல் 17 கோடியே 40 லட்சம் பார்வையாளர்கள் கடந்து ஒய் திஸ் கொலவெறி பாடலின் சாதனையை முறியடித்துள்ளது.
No comments:
Post a Comment