தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.
தல ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கும் இப்படம் வரும் 10 தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் விஸ்வாசம் படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் பொங்கலுக்கு பாலகிருஷ்ணா நடித்த NTR Biopic , ராம்சரணின் வினய விதேய ராமா, சூப்பர் ஸ்டாரின் பேட்ட ஆகிய படங்கள் அங்கு ரிலீஸ் ஆவதால் விஸ்வாசம் படத்தை குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அங்குள்ள அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment