தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஜகபதி பாபு, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, அனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ்க்கு பிறகு விஸ்வாசம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தல ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.
இப்படம் ஜனவரி 10 தேதி திரைக்கு வர இருக்கிறது. இதே நாளில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனால் தியேட்டர்களை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment