உலக நாயகன் கமல்ஹாசனின் கடைசி படமான இந்தியன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த கமல்ஹாசனிடம் இந்தியன் 2 படத்தில் அரசியல் கருத்துக்கள் இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம், இரண்டையும் இணைக்க விரும்பவில்லை. இனிமேல் படத்தில் மட்டும் தான் அரசியல் கருத்து கூறவேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை. வெளியில் வந்தும் சொல்வேன்" என கூறியுள்ளார்.
கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
No comments:
Post a Comment