Breaking

Post Top Ad

Your Ad Spot

Jan 4, 2019

தேசிய அளவில் பேட்ட படத்தின் சாதனை! இதை செய்யும் முதல் நடிகர் ரஜினிகாந்த்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் படம் பேட்ட. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, சசிக்குமார், நவாசுதீன் சித்திக், பாபிசிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீஸர் மற்றும் டிரைலர் போன்றவற்றை ரசிகர்கள் கொண்டாடி தீர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் மற்றுமொரு கொண்டாட்டமான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பேட்ட படத்தின் பாடல்கள் தேசிய அளவில் ஆல் இந்திய ரேடியோ ரேங்கிங்கில் 11வது இடத்தை பிடித்துள்ளதாக சோனி மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தேசிய ரேங்கிங்கில் இடம் பிடித்த முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையை பேட்ட திரைப்படம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages