தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான பிரி புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சுந்தர் சி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் நீங்கள் இயக்க மிஸ் ஆன நடிகர் யாராவது இருக்கிறார்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் இயக்க மிஸ் செய்த நடிகர் விஜய் தான் என பதிலளித்துள்ளார். மேலும் விஜய்க்காக கதை எழுதி கடைசியில் வேறொரு நடிகரை வைத்து இயக்கி ஹிட் ஆன படங்கள் மட்டுமே ஏழு என்று கூறியுள்ளார்.
இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து சம்பாதித்த தயாரிப்பாளர்களை விட விஜய்க்காக கதை எழுதி அதிகமாக லாபம் பார்த்த இயக்குனர் நானாக நான் இருப்பேன் என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment