செக்க சிவந்த வானம் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் பிஸியாக விட்டார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
தற்போது சுந்தர் சி இயக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்துவரும் சிம்பு இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் பூஜை சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளதாக என அண்மையில் செய்திகள் வெளியானது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இமைக்கா நொடிகள், அடங்க மறு போன்ற படங்களில் நடித்த ராஸி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment