சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டு வரும் அதே நேரத்தில் ரசிகர்கள் பேனர், கட்-அவுட் வைப்பது என மாஸாக ஏற்பாடு செய்து வருகின்றனர். மறுபுறம் ரிசர்வேஷன் தொடங்கி மளமளவென டிக்கெட்டுகள் விற்று வருகின்றனர்.
இந்நிலையில் பேட்ட திரைப்படம் USAவில் 140 ஏரியாக்களில் ப்ரீ புக்கிங்கில் மட்டும் $315K வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொங்கலுக்கு திரைக்கு வரும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
No comments:
Post a Comment