சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.
மாநாடு அரசியல் பற்றிய படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக இமைக்கா நொடிகள் புகழ் ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியானது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல் என்னவென்றால் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.
ஏற்கனவே யுவன்-சிம்பு கூட்டணியில் நிறைய சூப்பர் ஆல்பங்கள் வந்துள்ளதால் படத்துடன் சேர்த்து பாடல்கள் மீதும் இப்போது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
No comments:
Post a Comment